New Zealand Clinch Maiden Women’s T20 World Cup Title


 மகளிர் T20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வசப்படுத்திய நியூஸிலாந்து மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

துபாய் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 158 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய தென்னாப்ரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 

எனினும் பவர் பிளே முடிந்து சீட்டுக்கட்டு போன்று விக்கெட்டுகள் சரிந்ததால் நூற்று இருபத்தி ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முறையாக T 20 உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. 

இந்த வெற்றியை நியூசிலாந்து வீராங்கனைகளும், ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். உலக கோப்பையை வெல்ல நியூசிலாந்து அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருந்த அமேலியகேர் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். 

அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த தென்னாப்பிரிக்க அணி, சாம்பியன் பட்டம் வெல்லும் என பலரும் கணித்த நிலையில் ஏமாற்றமாக அமைந்தது. ஒரே ஆண்டில் ஆண்களுக்கான T 20 உலகக் கோப்பையை தொடர்ந்து மகளிர் T 20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்க அணி தோல்வியை தழுவி இருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Post a Comment

Previous Post Next Post