தூய்மையான இலங்கை Clean ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் Pirasidant

பாராளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மூன்றாவது பிரசாரக்கூட்டம் ஹோமாகம வில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வின் தலைமையில் இந்தக்கூட்டம் இடம்பெற்றது.



இவ் நிகழ்ச்சியில் ஜனாதிபதி கூறிய கருத்துக்கள்..

 "நாம் புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். Clean ஸ்ரீலங்கா. தூய்மையான இலங்கை. தூய்மையான சுற்றுச்சூழலும் தூய்மையாக இருக்கும். அதேநேரத்தில் தூய்மையான கழிப்பறை அனைத்தும் இருக்கும். இதற்காக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

தூய்மையான இலங்கை Clean ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட இந்த திட்டத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடிய அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். அதற்கான நிதியம் ஒன்றை ஸ்தாபிக்கவும் நாம் எதிர்பார்க்கின்றோம். ஓடைகள், குளங்கள், வீதிகள் அனைத்தையும் தூய்மைப்படுத்துவோம். 

ஆசியாவிலேயே தூய்மையான நாடாக இலங்கையை மாற்றும் நோக்கத்தோடு நாம் செயற்படவுள்ளோம். தூய்மையான கழிவறை கட்டமைப்பு, தூய்மையான பஸ்தரிப்பிடம், தூய்மையான ரயில்நிலையம், தூய்மையான ரயில், தூய்மையான பஸ் என அனைவர் தொடர்பிலும் மனித நேயத்தோடு செயற்படுகின்ற சமூகத்தையும் சிறந்த பண்புகள் உள்ள சமூகத்தையும் நாம் உருவாக்குவோம்.

 தூய்மை என்பது சுற்றுச்சூழல் மாத்திரமல்ல. அனைத்து பக்கத்திலும் இலங்கையை தூய்மைப்படுத்துவோம். இலங்கை வரலாற்றில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 ஆம் ஆண்டை நாம் மாற்றுவோம். அதற்காக விமான நிலையத்தை விஸ்தரிக்க வேண்டும்.




 நாம் எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் எனில் தற்போதைய நிலையில் அவர்கள் இரண்டரை மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிடும். விமான நிலைய அபிவிருத்தி திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாம் ஜப்பான் தூதுவருடன் கலந்துரையாடி மீண்டும் அந்த திட்டத்தை ஆரம்பித்து இரண்டாவது முனையத்தை விஸ்தரிக்கும் பணிகளை ஆரம்பித்து குறுகிய காலத்தில் முடிவு செய்யவுள்ளோம். மூன்று நான்கு வருடங்களாகும் போது நாட்டின் அரச துறையை செயல்திறனுள்ள சேவையாக நாம் மாற்றுவோம். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எம்மீது வைத்துள்ள பார்வையை எந்த வகையிலும் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவிடாமல் வலுவாக இந்த திட்டத்தை முன்னெடுப்போம்."

சந்தேகம் கொள்ளவேண்டாம். மூன்று மாதங்களில் வீழ்ச்சி அடையும். ஆறு மாதங்களில் வீழ்ச்சி அடையும் என துன்பத்தில் புலம்புகின்றனர். தோல்வியின் சோகத்தை வெளிப்படுத்துகின்றனர். ஒப்பாரி வைக்கின்றனர். வேறு என்ன செய்கின்றனர்? இதை வீழ்ச்சி அடைய செய்ய முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். தெரிந்து கொண்டே கூறுகின்றனர். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை கட்டியெழுப்பியதன் பின்னரே இந்த பயணத்தை நிறுத்துவோம். அதற்கு முன்னதாக நிறுத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்."





                        



Post a Comment

Previous Post Next Post