🛑அரச பெருந்தோட்ட கம்பனிகளால் வழங்கப்படும் தீபாவளி கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு!
30_10_2024- Wednesday
தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு அரச பெருந்தோட்ட கம்பனிகளால் வருடாந்தம் வழங்கப்படும் பண்டிகை கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில், பத்தாயிரம் ரூபாயாக இருந்த தொகை, 20,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டங்களைச் சேர்ந்த உழைக்கும் தமிழ் மக்களின் கொள்வனவு திறனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags
Sri lanka News
